தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!!

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் ஆகும்.

இந்நிலையில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வெள்ளாங்கோவில் உள்ள ராமேஸ்வர முருகன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வருமானத்துக்கு அதிகமாக 354 சதவீதம் சொத்துகளை குவித்ததாக ராமேஸ்வர முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2012-2016 காலகட்டத்தில் பள்ளி கல்வித்துறையில் பொறுப்புகளில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.

ராமேஸ்வர முருகன் மனைவி அகிலா, தந்தை பழனிசாமி, தாய் மங்கையர்கரசி, மாமனார் அறிவுடைநம்பி, மாமியார் ஆனந்தி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராமேஸ்வர முருகனிடம் ஏப்ரல் 2012ல் ரூ.1,98,10,000 மதிப்பிலான சொத்துகள் இருந்தது. மார்ச் 2016ல் சொத்து மதிப்பு 6 கோடியே 52 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது. வருமானத்தை விட 3கோடியே 89 லட்சத்து 21ஆயிரம் ரூபாய் சொத்துகளை குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் 13ம் தேதி நடைபெறுகிறது

தேர்தல் வெற்றிக்கு பின் முதன்முறையாக ராகுல்காந்தி ரேபரேலி பயணம்: வீரமரணமடைந்த வீரர் குடும்பத்துக்கு ஆறுதல்