ஆசிரியை இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி: சார் பதிவாளர், 7 பேர் மீது வழக்கு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி, உசேன் காலனி பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் தெய்வானை(52). பள்ளி ஆசிரியை. இவருக்கு சொந்தமான சிவகாசி அருகே விஸ்வநத்தம் மகாராஜா நகரில் 2 பிளாட்களை கடந்த 2022ல் மகன் படிப்பு செலவுக்காக வங்கியில் அடமானம் வைக்க, வில்லங்க சான்று வாங்கியபோது, அந்த நிலம் செந்தில்குமார் என்பவரது பெயரில் இருந்ததும், ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.9 லட்சம் கடன் பெற்று இருப்பதும் தெரியவந்தது.
அதில், தெய்வானை கடந்த 13.7.2010ல் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து, பொய்யான ஆவணங்களை வைத்து தனலட்சுமி என்பவர் செந்தில்குமாருக்கு நிலத்தை விற்றது தெரியவந்தது. இதற்கு பத்திர எழுத்தர் வைரமுத்து, சார்பதிவாளர் செந்தில்ராஜ்குமார் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின்படி சிவகாசி டவுன் போலீசார், சார்பதிவாளர் செந்தில்ராஜ்குமார், பத்திர எழுத்தர் வைரமுத்து உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோவில் ஆசிரியர் கைது

இலவச வீட்டுமனை பட்டா ரத்தை கண்டித்து குடியேறும் போராட்டம்: உசிலம்பட்டி அருகே பரபரப்பு