ஜார்க்கண்டில் சக ஆசிரியர்களை சுட்டு கொன்ற ஆசிரியர்

ராஞ்சி: ஜார்க்கண்டின் கோடா மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியர்கள் 2 பேரை சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தலைநகர் ராஞ்சியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடா மாவட்டம் பொரையாஹ்ட் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நேற்று பகல் 11 மணிக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியர், ஆசிரியையை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். பின்னர், தன்னைத்தானே சுட்டு கொண்டுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஐசிசி டி20 உலக கோப்பை பைனல்: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு

ஷபாலி 205, மந்தனா 149 இந்தியா 525/4