வரி ஏய்ப்பு புகார்: சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் தொடர்புடைய 60 இடங்களில் ஐ.டி. சோதனை..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் தொடர்புடைய 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள வரமகாலட்சுமி ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரமகாலட்சுமி கடையின் உரிமையாளர் கோபிநாத் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார்.

வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள வரமகாலட்சுமி பட்டு சேலை ஜவுளிக் கடையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கலாமந்திர், மந்திர், வரமகாலட்சுமி சில்க்ஸ், கேஎல்எம் ஃபேஷன் மால் பெயர்களில் கலாமந்திர் குழுமம் புடவை விற்பனை செய்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை