வரிச்சலுகை இல்லை 8 கோடி பேர் ஏமாற்றம்

வரி வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதால், வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. இதனால், வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 8 கோடிக்கு மேல் அதிகரித்தது. கடந்த டிசம்பர் 31ம் தேதிப்படி 8.18 கோடிப் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த முறை ரூ.10 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அறிவிப்பு வெளியாகும் என இவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேற்றைய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது 8 கோடிப் பேருக்கும் பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி