ரூ.1.78 கோடி வரி செலுத்தாததால் பெங்களூருவில் உள்ள ஜி.டி. வணிக வளாகத்திற்கு சீல் வைப்பு…!!

பெங்களூரு: ரூ.1.78 கோடி வரி செலுத்தாததால் பெங்களூருவில் உள்ள ஜி.டி. வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள ஜி.டி வணிக வளாகத்திற்கு முதியவர் தன்னுடைய மகனோடு படம் பார்க்க சென்றுள்ளார். ஆனால் அவர் வேஷ்டி அணிந்திருப்பதாக கூறி மாலுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த நிகழ்வை கண்டித்து கன்னட அமைப்பினர்கள் அந்த மாலின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் ஜி.டி வணிகவளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்ட நிலையில், தற்போது அந்த மாலில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மால் 1.78 கோடி வரி செலுத்தாமல் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்