6 ஆண்டுகளாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள நங்கநல்லூர் வெற்றி வேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சீல் வைப்பு

சென்னை: 6 ஆண்டுகளாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள நங்கநல்லூர் வெற்றி வேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் 30 ஆண்டுகளாக வெற்றி வேல், வேலன் ஆகிய திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி வரி உயர்த்தியது. அப்போது முதல் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் வரியை கட்ட முடியாது என நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து வரி செலுத்திவிட்டு ஆஜராகும்படி நீதிபதி தெரிவித்தார். அன்று முதல் 2 திரையரங்குகளுக்கு சுமார் ரூ.60 லட்சம் வரை வரி பாக்கி வைத்துள்ளனர். இதனை அடுத்து சென்னை மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் இன்று காலை 9 மணிஅளவில் 2 திரையரங்குகளுக்கும் சீல் வைத்தனர். இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது

நகை பறிக்க சென்றபோது சத்தம் போட்டதால் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தோம்: கைதான 4 பேர் வாக்குமூலம்