டாடா பஞ்ச் இவி

டாடா மோட்டார்சின் துணை நிறுவனமான டாடா பேசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிடி நிறுவம் டாடா பஞ்ச் இவி என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 60 கிலோவாட் பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 25 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கி.மீ தூரம் வரை செல்லும். ஸ்டாண்டர்டு சார்ஜரில் 9.4 மணி நேரத்திலும், 50 கிலோவாட் சார்ஜரில் 10 முதல் 80 சதவீதத்தை 56 நிமிடங்களிலும் சார்ஜ் செய்ய முடியும்.

இதுபோல் லாங் ரேஞ்சில் 35 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள மோட்டார் 90 கிலோவாட் பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் 421 கி.மீ தூரம் வரை செல்லும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை ஸ்டாண்டர்டு சார்ஜரில் 13.5 மணி நேரத்திலும், 50 கலோவாட் சார்ஜரில் 10 முதல் 80 சதவீதத்தை 56 நிமிடங்களிலும் சார்ஜ் செய்ய முடியும். துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.10.99 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் ரூ.14.49 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு

பைக்கில் குட்கா கடத்திய வாலிபர் கைது: 15 கிலோ, பைக் பறிமுதல்

பேப்பர் கிடங்கில் தீ விபத்து