டாடா நெக்சான் இவி டார்க்

டாடா நிறுவனம் நெக்சான் இவி டார்க் எடிஷன் காரை 2024 பாரத் மொபிலிடி வாகனக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தது. தற்போது சந்தையில் இதனை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 40.5 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 456 கி.மீ தூரம் வரை செல்லும். இதிலுள்ள மோட்டார் அதிகபட்சமாக 142 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். வி2எல் மற்றும் வி2வி என்ற இரண்டு வித சார்ஜிங் தேர்வுகளில் இது வருகிறது. சார்ஜர் திறனுக்கு ஏற்ப 56 நிமிடம் முதல் 15 மணி நேரம் வரை ஆகும். டூயல் டிஜிட்டல் டிஸ்பிளே, கிளைமேட் கண்ட்ரோல், எல்இடி லைட்கள், எக்ஸ் வடிவ டெயில் லாம்ப்கள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.19.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்