டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 5 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில், மே மாதம் மேலும் 5 மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

திரும்ப பெறும் பாட்டில்களை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என மனுதாரர்கள் தரப்பில் வாதம் செய்தனர். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விறக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சராசரியாக ஒருத்தி நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த திட்டம் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் தற்போது செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, தேனி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கு, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜனவரி மாதம் முதல், திருவாரூர், தருமபுரி, கன்னியகுமாரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மே மாதம் முதல், கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

 

Related posts

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது