டாஸ்மாக் காலி பாட்டில்களை பெறும் திட்டம் செப். முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.83 கோடி உண்டியல் காணிக்கை

3 சட்டங்களை ஆராய நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

இன்றைய நாள் எனக்கானது: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி