மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணியை பூமி பூஜை செய்து ஊராட்சி தலைவர் கலாவதி தொடங்கி வைத்தார். மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி கொங்கியம்மன் நகர் பகுதியில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

ஊராட்சி தலைவர் கலாவதி நாகராஜ் பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். அப்போது துணைத்தலைவர் கலாவதி மனோகரன், மீஞ்சூர் வட்டார மேற்பார்வையாளர் கோதை முருகன், வார்டு உறுப்பினர் வள்ளி விஸ்வநாதன், ஊராட்சி செயலர் பொற்கொடி, முன்னாள் வார்டு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் மகளிரணியினர் உடன் இருந்தனர் .

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி