பூந்தமல்லி நகராட்சி 9-வது வார்டில் ரூ.23 லட்சம் மதிப்பில் தார் சாலை பணி: நகர்மன்ற தலைவர் திடீர் ஆய்வு

பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டு பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மழைக்காலத்திற்கு முன்பே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில், பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு அம்மான் நகர் பிரதான சாலை பகுதியில் நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.23 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தார் சாலை அமைக்கும் பணியை நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் திடீரென நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சாலை தரமானதாகவும், உரிய விதிமுறைகளுடன் அமைக்கப்படுகிறதா என்று அவர் சாலையை தோண்டி பார்த்து ஆய்வு செய்தார். சாலை பணியை துரிதமாகவும், தரமானதாகவும் அமைக்க வேண்டும் என்று சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்