தஞ்சை ஆற்றூர் கிராமத்தில் விவசாயம் செய்து அசத்தி வரும் வடமாநிலதொழிலாளர்கள்..!!

தஞ்சாவூர்: தமிழகத்தில் சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் கட்டிட வேலை, டீ கடை, துணிக்கடை என பல இடங்களில் அதிக அளவில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். இது ஒரு புரம் இருக்க தற்போது விவசாய பணியிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கோடை நடு அறுவடை பணிகள் முடிந்து தற்போது குருவை நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றூர் கிராமத்தில் வடமாநில தொழிலாளர்கள் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாளர்கள் பல குழுக்களாக பிரிந்து தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் பணி புரிந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாச்சூர் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடமாநில தொழிலாளர்கள் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை