தாமிரபரணியில் கழிவுகளை கொட்டினால் அபராதம்?: ஐகோர்ட் கிளை கேள்வி

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் உள்ள பிளாஸ்டிக், குப்பைக் கழிவுகளை அகற்ற எவ்வளவு காலம் ஆகும்? என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தாமிரபரணியில் கழிவுகளை கொட்டுவோர் மீது ஏன் கடுமையான அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கக் கூடாது? ஆற்றை சுத்தப்படுத்த எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நெல்லை ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்