தமிழக காவல்துறையில் முதல்முறையாக கோவையில் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச ஒத்திகை

கோவை: தமிழக காவல்துறையில் முதல்முறையாக கோவையில் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச ஒத்திகை நடத்தப்பட்டது. கோவை அவிநாசி ரோட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் டிரோன் பயன்படுத்தி கண்ணீர் புகை குண்டு வீசுவதற்கான ஒத்திகை நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகையில், போலீசார் கலவரக்காரர்கள் போல ஒன்று கூடி எதிர்ப்பு காட்டி கோஷமிட்டனர். அப்போது அந்த இடத்தில் டிரோன் பறக்க விடப்பட்டு கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘டிரோன்கள் மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை எளிதாக கலைக்க முடியும். ஒரே நேரத்தில் 4 கண்ணீர் புகை குண்டுகளை வீச முடியும். 2 நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்த முடியும். டிரோன்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை, போட்டோவை வைத்து கண்டறிய முடியும். தப்பி செல்பவர்களையும் டிரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை போட்டோ, வீடியோ எடுக்க முடியும். தமிழகத்தில் போலீஸ் துறையில் டிரோன்கள் பயன்படுத்துவது கோவையில் தான் முதல் முறையாக நடக்கிறது’’ என்றார்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்