முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

கிளாம்பாக்கத்திலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஆக.30ல் 355 பேருந்துகளும், ஆக.31ல் 360 பேருந்துகளும் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆக.30ல் 75 பேருந்துகளும், ஆக.31ல் 75 பேருந்துகளும் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

மாதாவரத்திலிருந்து ஆக. 30ல் 20 பேருந்துகளும் ஆக.31ல் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஞாயிறு (செப்.1) அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக கார்கே குற்றசாட்டு

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை