மாவட்ட தலைநகரங்களில் கல்லறை தோட்டம் கபர்ஸ்தான் அமைக்க தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்களுக்கு கபர்ஸ்தான்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, சிறுபான்மையினர் நல இயக்குநர் 22 மாவட்ட தலைமையிடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசாங்க நிலங்களில் கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறை தோட்டங்கள் இல்லை என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடம் இருந்து அறிக்கை பெற்றிருந்தார். அதன்படி, இந்த மாவட்டங்களில் முதல்வர் அறிவித்தது போல், மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பில் கல்லறை தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் ரூ.10 கோடி செலவில் அமைத்திட அரசு ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பிக்கிறது.

 

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி