நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து ஜூலை 1 முதல் நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

நெல்லை: நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து ஜூலை 1 முதல் நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஜூலை 1 முதல் அக்.28 வரை 120 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 50 கனஅடிக்கு மிகாமல் நீர் திறக்க ஆணை பிறப்பித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம். நாங்குநேரி வட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 01.07.2024 முதல் 28.10.2024 வரை 120 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடவும், நீர்த்தேக்கத்தில் இருந்து கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட 2,548.94 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுதலாக உள்ள நீரினை வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3,231.97 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கனஅடிக்கு மிகாமல், நீர் இருப்பை பொறுத்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் உள்ள வள்ளியூரான்கால், படலையார்கால், ஆத்துக்கால் மற்றும் வடமலையான்கால் ஆகியவற்றின் நேரடி பாசனப்பரப்பு 5,780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

Related posts

குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை: உயர்ந்துகொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களின் லாப இலக்கு

ரத்து செய்த ஜாபர் சேட் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பதா?.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து!!