திருவிடைமருதூரில் நூலகத்தை தரம் உயர்த்த தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு

 

திருவிடைமருதூர், நவ.15: திருவிடைமருதூர் அரசு நூலகத்தை டிஜிட்டல் நூலகமாக தரம் உயர்த்த தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் திருமஞ்சன வீதியில் பல ஆண்டுகளாக உள்ள அரசு கிளை நூலகத்தில் தற்போது 74 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 100 வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 100க்கும் அதிகமான வாசகர்கள் படிக்க வந்து செல்கின்றனர். இந்த நூலகத்தை டிஜிட்டல் நூலகமாக தரம் உயர்த்த வேண்டுமென தமிழக அரசுக்கு வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நூலகத்தை பரிசீலித்து டிஜிட்டல்நூலகமாக தரம் உயர்த்தி, மாற்றம் செய்ய ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இதையடுத்து நூலக கட்டடத்தை பழமை காரணமாக இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டப்பட்டு, முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட உள்ளது என்று கிளைநூலகர் வடிவேல் தெரிவித்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை