தமிழக மீனவர்கள் 20 பேர் கைது: விசாரணைக்கு பின் விடுவித்தது இலங்கை கடற்படை

மண்டபம்: தமிழக கடலோர பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 20 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. விசாரணைக்கு பின் அனைவரையும் விடுவித்தது. தமிழக கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை 300க்கும் அதிகமான விசைப்படகுகளில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். உயிருக்கு பயந்த மீனவர்கள் அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். பின்னர் படகுகளை சோதனையிட்டு அதில் இருந்த 20 மீனவர்களை கைது செய்தனர். தொடர்ந்து மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களா அல்லது வேறு பகுதியை சேர்ந்தவர்களா என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணைக்கு பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது