தமிழ்நாடு நாளையொட்டி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டி

சென்னை: தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்படுகிறது. சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்ட போட்டி 09.07.2024 அன்று சென்னை, அண்ணாசாலையில் அரசினர் மதரசா ஐ ஆஜம் மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும். சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 18ம் நாளன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளுக்கான தலைப்புகள்: குமரி தந்தை மார்சல் நேசமணி. தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது