பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் போராட்டம் அறிவித்த தமிழக காங். எஸ்சி பிரிவு தலைவருக்கு வீட்டு சிறை: தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை

சென்னை: பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் போராட்டம் அறிவித்த தமிழக காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன்குமாரை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன், “தொடர்ந்து இந்திய மக்களுக்கு பல்வேறு அநீதிகளை செய்து வரும் மோடி தமிழக மண்ணில் கால் வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டம் நடத்தப்படும்” என கூறியிருந்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவுறுத்தலின் பேரில் இந்த போராட்டத்தை நடத்தப் போவதாகவும், இதில் திரளாக தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை, போரூரில் உள்ள இல்லத்தில் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சன் குமார் கூறுகையில் ‘மோடி தமிழகம் வரும்போது எல்லாம் அவரை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

 

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு