Tuesday, September 17, 2024
Home » பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை : தமிழக அரசு

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை : தமிழக அரசு

by Porselvi

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஒன்றிய அரசின் நிர்பயா நிதியை முழுமையாகப் பெற்று பயன்படுத்த ஏதுவாக உயர் மட்ட அதிகாரம் உள்ள குழுவை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நிர்பயா நிதி மூலம் தமிழகத்தில் காவல் நிலையங்களில் பெண்கள் ஆதரவு பிரிவை அமைத்து வலுப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் புதிதாக 13 ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வந்த 19 பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றம் தடுப்பு திட்டம், சைபர் தடயவியல் ஆய்வகங்களுக்கு கருவிகள் கொள்முதல் செய்தது உள்ளிட்ட திட்டங்களுக்கு நிர்பயா நிதி பயன்படுத்தப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

You may also like

Leave a Comment

ten + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi