தமிழக அரசில் 1768 இடைநிலை ஆசிரியர்கள்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Secondary Grade Teacher. மொத்த காலியிடங்கள்: 1768.
சம்பளம்:ரூ.20,600-75,900.
வயது: 1.7.2024 தேதியின்படி பொதுப் பிரிவினர் 53 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/ மிகவும் பிற்பட்டோர்/ முஸ்லிம் மற்றும் ஆதரவற்ற விதவைகள் 58 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் பணிக்கான தொடக்கக் கல்வி பாடத்தில் 2 வருட டிப்ளமோ அல்லது என்சிடிஇ யில் அங்கீகரிக்கப்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான தொழிற்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் தமிழக அரசால் நடத்தப்படும் TN-TET தாள்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆப்ஜக்டிவ் கேள்விகளை கொண்ட எழுத்துத் தேர்வு மற்றும் TN-TET Paper-I தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஜூன் 23ம் தேதி தேர்வு நடைபெறும்.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.3.2024.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்