தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆணையராக இருந்த பழனிகுமார், வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில், புதிய ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 239-ஆம் பிரிவுடன் சேர்த்து படிக்கப்பட வேண்டிய இந்திய அரசமைப்பின் 243-K எனும் உறுப்பின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி பா. ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., அவர்களை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக அவர் பதவியேற்ற நாளிலிருந்து ஐந்தாண்டுகள் கால அளவிற்கு அல்லது அவர் அறுபத்து ஐந்து வயது எய்தும் வரை, இதில் எது முந்தையதோ அதுவரை, இதன் மூலம் பணியமர்த்தம் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா