தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் நிகழ்வு நாளை இரவு 11.30 மணி வரை நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் நிகழ்வு நாளை இரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை தொடரும் எனவும் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் கடல் அலை அதிக உயரம் எழும்பும் வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. குமரியில் 2.5 மீ., ராமநாதபுரத்தில் 2.8 மீ., நெல்லை, தூத்துக்குடியில் 2.6 மீ. உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்; ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி