தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்

சென்னை: மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 17ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் நேற்று வறண்ட வானிலை நிலவியது. கரூர் பரமத்தியில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நீலகிரி, கோவை திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

மேலும் இதேநிலை நீடித்து 15ம் தேதியில் நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 17ம் தேதி வரையில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடியமிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று முதல் 15ம் தேதி வரை வீசும். வட தமிழக கடலோரப் பகுதிகளிலும் 16ம் தேதி சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுப்படுகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது