தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, குமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், மத்தியமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று(23-09-2024) முதல் வரும் 29ம் தேதி வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் கோவை, நீலகிரி, ஈரோடு, குமரி, நெல்லை, வேலூர், தி.மலை, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு