ரூ.1000 மட்டுமே நிதி: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஒன்றிய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டது அம்பலம்

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஒன்றிய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரங்கள் அடங்கிய பிங்க் புக் மூலம் நிதி குறைப்பு அம்பலமாகியுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, 2024-25க்கான முழுமையான பட்ஜெட்டில் குறைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு;

* காட்பாடி-விழுப்புரம் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டது; தற்போது தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு

* சேலம்-கரூர்-திண்டுக்கல் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு; தற்போதைய முழு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு

* ஈரோடு-கரூர் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டது. ஈரோடு-கரூர் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு தற்போதைய முழு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 ஒதுக்கீடு

* மொரப்பூர்-தருமபுரி 36 கி.மீ. புதிய ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால | பட்ஜெட்டில் ரூ.115 கோடி அறிவிக்கப்பட்டது. தற்போது மொரப்பூர்-தருமபுரி ரயில் வழித்தட திட்டத்துக்கு வெறும் ரூ.49 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. 2019 தேர்தலுக்கு முன் மொரப்பூர்-தருமபுரி புதிய ரயில் பாதைக்கு அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அடிக்கல் நாட்டினார்

* ஈரோடு-பழனி புதிய ரயில் பாதை அமைக்க இடைக்கால பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. ஈரோடு-பழனி 91 கி.மீ. புதிய ரயில் பாதை திட்டத்துக்கு தற்போது வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு

* திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணா இடையே 70 கி.மீ. புதிய ரயில் பாதை அமைக்க இடைக்கால பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு; திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணா புதிய ரயில் பாதை திட்டத்துக்கு தற்போது வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு

* திண்டிவனம்-நகரி இடையே 179 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க இடைக்கால பட்ஜெட்டில் ரூ.350 கோடி ஒதுக்கீடு; பாதை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தற்போது ரூ.153 கோடியாக குறைப்பு

Related posts

100 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது