100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு : தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!!

புதுடெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை ஒன்றிய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகம், புதுச்சேரியில் நாளொன்றுக்கு தற்போது ரூ.294 வழங்கப்படும் நிலையில் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய ஊதிய விவரங்களின்படி அதிகபட்சமாக அரியானா, சிக்கிம் மாநிலங்களில் ரூ.374 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் அரசாணையின்படி மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட உள்ள தினசரி ஊதிய விவரம் பின்வருமாறு..

ஆந்திரப் பிரதேசம் ரூ. 300.00
அருணாச்சல பிரதேசம் ரூ. 234.00
அசாம் ரூ. 249.00
பீகார் ரூ. 245.00
சத்தீஸ்கர் ரூ. 243.00
கோவா ரூ. 356.00
குஜராத் ரூ. 280.00
ஹரியானா ரூ. 374.00
இமாச்சலப் பிரதேசம் – Non -scheduled பகுதிகள் – ரூ. 236.00 scheduled பகுதிகள் – ரூ.295.00
ஜம்மு -காஷ்மீர் ரூ. 259.00
லடாக் ரூ. 259.00
ஜார்கண்ட் ரூ. 245.00
கர்நாடகா ரூ. 349.00
கேரளா ரூ. 346.00
மத்திய பிரதேசம் ரூ. 243.00

மகாராஷ்டிரா ரூ. 297.00
மணிப்பூர் ரூ. 272.00
மேகாலயா ரூ. 254.00
மிசோரம் ரூ. 266.00
நாகாலாந்து ரூ. 234.00
ஒடிசா ரூ. 254.00
பஞ்சாப் ரூ. 322.00
ராஜஸ்தான் ரூ. 266.00
சிக்கிம் ரூ. 249.00
சிக்கிம்(குவாதாங், லாச்சுங் மற்றும் லாச்சென் என்ற மூன்று கிராம பஞ்சாயன்) ரூ. 374.00
தமிழ்நாடு ரூ. 319.00
தெலுங்கானா ரூ. 300.00
திரிபுரா ரூ. 242.00
உத்தரபிரதேசம் ரூ. 337.00
உத்தரகாண்ட் ரூ. 337.00
மேற்கு வங்கம் ரூ. 350.00
அந்தமான் – நிக்கோபார் தீவுகள் : அந்தமான் ரூ. 329.00 ; நிக்கோபார் ரூ. 347.00
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் தின் ரூ. 324.00
லட்சத்தீவு ரூ. 315.00
புதுச்சேரி ரூ. 319.00

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு