3 நாள் பயணமாக மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?

கன்னியாகுமரி: 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 30,31, ஜூன் 1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் வியாழக்கிழமை அதாவது மே மாதம் 30ம் தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அன்று பிற்பகல் படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார்.

மேலும், ஜூன் மாதம் 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவுப் பாறை விட்டு வெளியே வந்து, பின்னர் டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்