தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பாக். எல்லை அருகே கைது: வரைபடம், கருவிகள் பறிமுதல்

புஜ்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று முன்தினம் மாலை மாநில உளவுத்துறை போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லோத்ராணி கிராமத்தை நோக்கி ஒரு நபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது, முறையாக பதில் அளிக்கவில்லை.

இதனால் அவரிடம் இருந்த பையை சோதனையிட்ட போது அதில் கட்ச் பிராந்தியத்தின் எல்லையோர கிராமங்கள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள நாகர்பார்கர், இஸ்லாம்கோட் போன்ற கிராமங்களின் கையால் எழுதப்பட்ட வரைபடம், ஸ்க்ரூ டிரைவர், ஸ்பானர், கட்டிங் பிளைர், கத்திரிகோல், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு மற்றும் சர்வதேச டெபிட் கார்டு ஆகியவை இருந்தன. பிடிபட்ட நபர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் லட்சுமணன் என தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

விசிக பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: ஆட்டோ டிரைவர் கைது