தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் நிபா தொற்றால் 14 வயது சிறுவன் உயிரிழந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. கேரளாவில் சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனது உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள ஒன்றிய அரசு கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டு இருந்தாலும் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் யாருக்காவது நிபா வைரஸ் தொற்று அறிகுறி இருக்கிறதா என கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையினை அளிக்க வேண்டும். அதோடு, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வருவோரை பரிசோதனை செய்து அதற்கான அறிகுறிகள் இல்லை என உறுதி செய்த பின்பே அவர்களை அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அரசை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு