தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை, கோவை, நெல்லை, மதுரை, விருத்தாச்சலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய புலளாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை உக்கடம் அல்அமீன் காலனி பகுதியில் வசிக்கும் ஏ.சி. மெக்கானிக்கான ரகுமான் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீட்டில் பரத் நாயக் என்ற தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பக்ருதீன் என்பவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கடிச்சி கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஆவார்.

நிதி வசூல், மூளை சலவை செய்தல், உபகரணங்கள கொடுத்து உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைபவர்கள் என சந்தேகம் ஏற்படும் நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்