தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 17 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 17 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. நாகையில் 15 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலம், கடலூர், பரங்கிபேட்டையில் தலா 12 செ.மீ. மழை பதிவானது. நாகை மாவட்டம் வேதாரண்யம், திருப்பூண்டியில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது. கோடியக்கரை, சிதம்பரம், தலைஞாயிறு, மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோவில், மதுராந்தகத்தில் தலா 10 செ.மீ. மழை பொழிந்துள்ளது.

நாகையில் 11 செ.மீ. மழை பதிவு:

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. காரைக்காலில் 10 செ.மீ., புதுச்சேரியில் 9.8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கடலூர் 8.7 செ.மீ., சிதம்பரம் 6.2 செ.மீ., செங்கல்பட்டு 4.8 செ.மீ. காஞ்சிபுரம் 4.7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை – வம்பன் 4 செ.மீ., சென்னை மீனம்பாக்கம் 3.5 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 2.5 செ.மீ. மழை பதிவானது,

பொன்னேரியில் 3 செ.மீ. மழை பதிவு:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நோத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. ஊத்துக்கோட்டை 2 செ.மீ., ஆவடி, சோழவரம், தாமரைப்பாக்கம், பூவிருந்தவல்லியில் தலா 1 செ.மீ. மழை பதிவானது. திருவள்ளூர், செங்குன்றம், கும்மிடிப்பூண்டியில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 5 இடங்களில் நேற்று மிக கனமழை பதிவு:

தமிழ்நாட்டில் நேற்று 5 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேளாங்கண்ணி, நாகை, நன்னிலம் கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் மிக கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 31 இடங்களில் கனமழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நேற்று மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்