தமிழக லோக் ஆயுக்தா தலைவர் பதவிக்கு எம்.ராஜாராம் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராமை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக லோக் ஆயுக்தா தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் கடந்தாண்டு நியமிக்கப்பட்டிருந்தார். ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி நீதித்துறை உறுப்பினராகவும், அத்துடன் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடும்போது அவர்களை விசாரிக்கும் அமைப்பான லோக் ஆயுக்தா செயல்படுகிறது. இந்நிலையில் அதன் தலைவராக செயல்பட்டு வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் கடந்த ஏப்ரல் 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து லோக் ஆயுக்தா சட்டம் 2018ன் படி, ராஜினாமா அல்லது இறப்பு உள்ளிட்ட காரணமாக தலைவர் பதவியில் காலியிடங்கள் ஏற்பட்டால் அதற்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை அக்குழுவின் மூத்த உறுப்பினர் தலைவராக செயல்படலாம். அதன்படி லோக் ஆயுக்தா அமைப்பின் மூத்த உறுப்பினர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் தலைவராக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி