தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

குற்றச்செயல்களை தடுப்பது, கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பது குறித்து உயரதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி வருகிறார். சொத்து தொடர்பான குற்றங்கள், குடும்ப வன்முறை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் காவல்துறையினரின் பிரச்சினைகள், சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு