தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 19 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியில் 17 செ.மீ., தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 15 செ.மீ., சாத்தூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்செங்கோடு, திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் நந்தியாறில் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

எடப்பாடி, சின்கோனா, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், மாமல்லபுரத்தில் தலா 12 செ.மீ. மழை பதிவானது. பூதலூர் (தஞ்சை), காஞ்சிபுரம், கடலூர், திருக்கழுக்குன்றம், எண்ணூரில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது. தழுதாழை (பெரம்பலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), குமாரபாளையத்தில் (நாமக்கல்) தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நேற்று 11 இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளது:

தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!