சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2024: மாநாட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்த முழு விவரம்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் 7ம் தேதி, தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024, நந்தமபாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் துவக்கி வைக்க உள்ளார்.

இந்த மாநாட்டின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

*மாநாட்டில் “1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை” (“Tamil Nadu Vision $ 1 Trillion”) எனும் ஆய்வறிக்கை வெளியிடப்படும்.

*முதலமைச்சர் அவர்கள் டான்ஃபண்ட் (TANFUND) திட்டத்தை துவக்கிவைப்பார். செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை, 2024, (Semiconductor and Advanced Manufacturing Policy, 2024) இந்த மாநாட்டில் வெளியிடப்படும்.

*30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பதிவு செய்துருக்கிறார்கள்.

*450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கு கொள்வார்கள்.

*50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

*9 நாடுகள் – சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், மற்றும் அமேரிக்கா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்குதார நாடுகளாக உள்ளனர்.

*26 அமர்வுகளில் 170க்கும் மேற்பட்ட உலக புகழ் வாழ்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.

*மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் உட்பட தேசிய மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள், மற்றும் பலர் சிறப்புரையாற்றுவார்கள்.

*சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட தொழில் துறையின் அரங்கம் (Pavilion), புத்தொழில் நிறுவனங்களின் அரங்கம், தமிழ்நாடு தொழிற் சூழல் அரங்கம், மற்றும் சர்வதேச அரங்கம் இந்த மாநாட்டின் சிறப்பம்சமாகும்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு