சேலம் வெல்லட்டும்! இந்தியாவுக்குச் சொல்லட்டும்!: தமிழ்நாட்டின் அடையாளமாக உயர்ந்து நிற்கும் உதயநிதி ஸ்டாலின்..முரசொலி புகழாரம்..!!

சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாக திமுக நாளேடு முரசொலி புகழாரம் சூட்டியுள்ளது. திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் இது தொடர்பாக கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்ணா, கருணாநிதி ஆகியோருக்கும் இளைஞர்களுக்கும் உள்ள நெருக்கம் பற்றியும், திமுகவில் இளைஞரணியை புகழ்ந்தும் பாராட்டப்பட்டுள்ளது. அதற்காக சில மேற்கோள்களும் காட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, “தீடீரென்று இளைஞரணியைப் புதிதாக உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?” – என்று கலைஞரிடம் கேள்வி கேட்கப்பட்டது எனவும், கழகத்தில் இளைஞர்கள் அதிகமாகி விட்டார்கள், அதனால்தான் என்று கலைஞர் பதில் அளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேபோல் “திடீரென்று இளைஞரணி மாநாட்டை இப்போது நடத்த வேண்டிய அவசியம் என்ன?” என்று இப்போது யாராவது கேட்பார்களேயானால், கழகத்தில் இளைஞர்கள் அதிகமோ அதிகம் ஆகிவிட்டார்கள்” என்பதுதான் அதற்குச் சரியான பதிலாக இருக்க முடியும் என்றும் முரசொலி நாளேடு குறிப்பிட்டுள்ளது.

இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின்,. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆகி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் அமர்ந்திருக்கிறார் என்றால் அவரை உருவாக்கிய களம், இளைஞரணி .சேலம் மாநாடு இந்தியாவே எதிர்பார்க்கும் மாநாடு என்பது உண்மைதான் . “காலம், தனக்கான அடுத்த தளபதியை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அவர்தான், இன்றைய இளைஞரணிச் செயலாளர் இனிய உதயம் உதயநிதி” என்றும் முரசொலி குறிப்பிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில் கட்சியின் அடையாளமாக மட்டுமல்லாது.

தமிழ்நாட்டின் அடையாளமாக உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார். கொள்கையைக் காக்கும் சமரில் சளையாத போராளியாக வலம் வந்த காரணத்தால்தான் உதயநிதி ஸ்டாலின் இன்று அகில இந்தியப் புகழையும் அடைந்து உயர்ந்து நிற்கிறார் என்றும் முரசொலி கூறியுள்ளது. திமுகவின் கொள்கையை ஊட்டுதலே முதல் வெற்றி எனவும், அதற்காகத்தான் சேலம் மாநாடு என்றும், நாடாளுமன்றத் தேர்தலை எந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது இந்த தலைப்பிலேயே இருக்கிறது என்றும் அந்த கட்டுரையில் முரசொலி குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்