சென்னை: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக கே.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை ‘செலவினம்’ செயலாளராக எஸ்.நாகராஜை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிகி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.