தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.மணிக்குமார் இருந்தவர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர்.

தமிழ்நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த பாஸ்கர் ஒய்வு பெற்றதையடுத்து, தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த எஸ். மணிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே எஸ். மணிகுமார் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்தவர். இதையடுத்து அவர் இங்கிருந்து கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டியிருந்தார். அங்கு ஒய்வு பெற்றதையடுத்து தற்போது தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை பதவி வகிப்பார். இவருடன் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற ராஜா இளங்கோ மற்றும் வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோர் அங்கு நீதிபதிகளாக உள்ளனர். மனித உரிமைகள் ஆணையத்தை பொறுத்தவரை எஸ். மணிகுமார், கண்ணதாசன் மற்றும் ராஜா இளங்கோ ஆகியோரும் செயல்படுவர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்