சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார். உயர்கல்வியில் தமிழ்நாட்டில் உள்ளதை போல எந்த மாநிலத்திலும் இல்லை என்பதை நிரூப்பித்துள்ளோம். தமிழ்நாட்டில் பாடத்திட்டத்திற்கு தனியாக குழு அமைக்கப்பட்டு அறிவியல் ரீதியான பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளோம். பன்னாட்டு அளவில் தமிழ்நாட்டின் கல்வி தரம் உயர்ந்துள்ளதை தெரியாமல் சிலர் பேசிக்கொண்டு இருக்கின்றனர் என அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.