தமிழ்நாட்டில் இன்றும் நாளை மறுநாளும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளை மறுநாளும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யும் என்பதால் இன்றும் நாளை மறுநாளும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 7 – 11 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது

‘மா மதுரை’ விழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

புதுச்சேரி பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு..!!