Saturday, September 21, 2024
Home » தமிழக அரசுத் துறைகளில் 2327 இடங்கள் :டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு

தமிழக அரசுத் துறைகளில் 2327 இடங்கள் :டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

குரூப்- 2 தேர்வுக்கான பணியிடங்கள்:
மொத்த இடங்கள்: 307.
Assistant Inspector-13, Special Branch Assistant-23, Probation Officer-1, Deputy Commercial Tax Officer- 336, Sub- Registrar Grade II-5, Special Assistant-2, Junior Employment Officer-5, Assistant Section Officer-6, Assistant Section Officer cum Programmer-4, Forester-107, Forester at TN Forest Plantation Corporation Ltd-7.

குரூப்- 2 ஏ தேர்வுக்கான பணியிடங்கள்
மொத்த பணியிடங்கள்: 1820.
Assistant- 26, Lower Division Clerk-5, Assistant Grade III-44, Assistant-5, Accountant (Finance)-26, Accountant-12, Junior Accountant-5, Male Warden- 1, Assistant at Various Department-576, Audit Assistant-8, Personal Clerk- 121, Junior Co-operative Auditor- 8, Executive Officer-2, Extension Officer-22, Revenue Assistant- 126, Assistant at Commercial Taxes-27, Junior Superintendent/Supervisor-12, Senior Inspector-497, Assistant Inspector-273, Handloom Inspector-2, Audit Inspector- 4, Full Time Residential Warden-1, Personal Assistant-1.

கல்வித்தகுதி:

1. Assistant Section Officer: (Post Code: 2201) ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் பொது சட்டம் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Assistant Section Officer cum Programmer:(Post Code: 2215) எம்சிஏ அல்லது எம்எஸ்சி.,ஐடி/எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. Forester: (Post Code: 3362, 3363). Agriculture/Animal Husbandry/Botany/ Chemistry/Computer Application/Computer Science/Forestry/Horticulture/Marine Biology/Zoology/Veterinary Science/Wildlife Biology ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Personal Clerk (Post Code: 1078) & Personal Assistant (Post Code:3355): ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் தமிழக அரசால் நடத்தப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலம் டைப்பிங் திறன் தேர்வு மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து திறன் தேர்வில் சீனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Junior Co-operative Auditor (Post Code:1016): Banking Management/Commerce/Computer Application/Economics ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6. Assistant (Post Code: 1077): Commerce/Economics/Statistics பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
7. Accountant (Finance)- (Post Code-3358) & Junior Accountant (Post Code: 3356). பி.காம்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
8. Extension Officer Grade II (Post Code: 3282): ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று Co-operative Training தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகள் தவிர இதர அனைத்து பணிகளுக்கும் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (பொது பிரிவினர்கள்)
1. Deputy Commercial Tax Officer: 18 முதல் 32க்குள்.
2. Probation Officer: 26 முதல் 42க்குள்.
3. Sub Registrar Grade II: 20 முதல் 32க்குள்.
4. Forester: 21 முதல் 32க்குள்.
5. Residential Warden: 18 முதல் 52க்குள்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி/எஸ்டி/ பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ சீர் மரபினர்/ முஸ்லிம்/மாற்றுத் திறனாளிகள்/ ஆதரவற்ற விதவைகளுக்கு தமிழக அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.அதிக பட்ச வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் தவிர இதர பணிகளுக்கு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. 01.07.2024 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.

சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு, முதல் நிலை தேர்வு (Preliminary Examination), பிரதான தேர்வு (Main Examination) என இரு கட்டங்களாக நடைபெறும். முதல் நிலை தேர்வு வருகிற செப்.10ம் தேதி நடைபெறும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ அருந்ததியர்/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.07.2024.

You may also like

Leave a Comment

fifteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi