தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 2553 உதவி மருத்துவர்கள்

பணி: Assistant Surgeon (General)
சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.
வயது: 01.07.2024 தேதியின்படி பொதுப் பிரிவினர்கள் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ முஸ்லிம்/ சீர் மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 47 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் படிப்பை முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தால் நடத்தப்படும் தமிழ் மொழி திறனறியும் தேர்வு மற்றும் பொது அறிவு, மருத்துவக்கல்வி தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்மொழி திறனறியும் தேர்வு 10ம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையிலும், இதர தேர்வுகள் எம்பிபிஎஸ் கல்வித்தகுதி அடிப்படையிலும் கேள்விகள் கேட்கப்படும்.

கட்டணம்: எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500 மட்டும். இதர பிரிவினருக்கு ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2024.

Related posts

74000 பேர் பனிலிங்க தரிசனம்

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்