தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் இறுதிபட்டியல் வெளியீடு ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்களர் சிறப்பு சுருக்க திருத்த இறுதிப்பட்டியல் வெளியிடும் தேதி ஜன.22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து இருந்தது.

இதுதொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை பதிவு செய்ய டிச.26ம் தேதி கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஜன.12ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல் சேர்க்க ஜன 1ம் தேதி இறுதிநாள் என்பது தற்போது ஜன.17ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் வெளியிடுவது ஜன.5ம் தேதியாக இருந்தது தற்போது ஜன.22ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது