தமிழக கல்வி முறை குறித்து ஒடிசா மாநில கல்வி குழு ஆய்வு

திருப்போரூர்: தமிழக கல்வி முறை குறித்து ஒடிசா மாநில கல்வி குழு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களை உள்ளடக்கிய கல்வித்திட்டம் சார்ந்த உட்கூறுகளை பார்வையிடுவதற்காக ஒடிசா மாநில கல்வித்துறை துணை இயக்குனர் மகேஸ்வர் சாகு தலைமையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டது.

திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தையும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இல்லம் தேடி சென்று கல்வி போதிக்கும் முறையையும் இந்த குழுவினர் பார்வையிட்டனர். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அரவிந்தன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் முகமது சலீம், வட்டார கல்வி அலுவலர்கள் சிவசங்கரன், ஜுலியட், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், ஆன்டனி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருவருள்செல்வி ஆகியோரும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்களும் தமிழக கல்வி முறை குறித்து ஒடிசா மாநில கல்விக் குழுவினருக்கு விளக்கி கூறி செயல்முறை விளக்கம் அளித்தனர். தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் ரேகா நமது மாநிலத்தின் உள்ளடங்கிய கல்விமுறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு