தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் மிக்ஜம் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் மேலும் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி கேரளாவை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக வங்கக் கடலில் இருந்து குளிர்ச்சியான காற்று ஈர்க்கப்படுவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் டிசம்பர் 9 -ம் தேதியன்று தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு